Tuesday, 23 June 2020

முடி கொட்டுதா! பயப்பட தேவையில்லை முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள். கவலை வேண்டாம்!

முடி கொட்டுதா! பயப்பட தேவையில்லை முடி கொட்டுதலுக்கான சில இயற்கை    தீர்வுகள். கவலை வேண்டாம்!

தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். சொத்து, சுகம் பறிபோவதை விட, முடி பறிபோவதை நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. அவ்வாறு முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

முடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வு. இதை அனுபவிக்கும் பலருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொண்டு, முடி கொட்டிய இடத்தை தலை வாரி மறைக்க முயல்வர். குளிக்கும் போது கழிந்த முடிச்சுருள்களை பார்க்கும் போதோ அல்லது தலை வாரும் போது சீப்புகளில் காணும் முடிச்சுருள்களை பார்க்கும் போதோ பலருக்கும் மனச்சோர்வு ஏற்படுவது உண்டு. பல பேருக்கு முடி கொட்டுதல் என்பது ஒரு இயற்கையான செயல்பாடு என்பது தெரியாது.

 இதற்கு ஒரே நிவாரணம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதே. இப்படி பயன்படுத்துவது இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் பற்றிய கவலைகளை விட்டெறியலாம். தலையில் வானூர்தி இறங்கும் தளம் அமைப்பது, சிிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வதே. அதற்கு கீழ்கண்டவைகளை படித்து, தலை முடி கொட்டுவதை எவ்வாறு குறைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் பால் 

குளிப்பதக்கு முன்பு தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.

தேங்காய் எண்ணெய் 

 தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு 
நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

முட்டை மற்றும் தேன் 
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் 30 நிமிடம் நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.

வெங்காயம் 
தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை வேண்டாம். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

Spending Time.

No comments:

Post a Comment

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry r...

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry recipe | Village Food Area Welcome to Youtube Channel: Village F...