Friday, 26 June 2020

மின்சாரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? Electrical History.

மின்சாரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? Electrical History.
துண்டிக்கப்பட்ட ஒரு தவளையின் 
கால்கள் 
சில உலோகங்களின் மீது பட்டபோது துடித்தன 
என்பதை இத்தாலியில் 1786-ம் ஆண்டு வாழ்ந்த உடல் இயல் வல்லுனர் லூகி கேல்வனி என்பவர் கண்டுபிடித்தார். 

Luigi Galvani

அவர் தவளை 
மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது என்று அறிவித்தார். 

Alessandro Volta,

அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானியான அலெக்சாண்ட்ரோ வோல்டா புத்திசாலித் தனமான ஒரு முடிவுக்கு வந்தார். தவளை யின் கால்கள் அல்ல, அவற்றின் மீது பட்ட உலோகங்களே மின்சாரத்தை உற்பத்தி
செய்தன என்று அறிந்து கொண்டார். 

இதன் அடிப்படையில் சில உலோகங்களைக் கொண்டு வோல்டாவின் அடுக்கு ஒன்றை உருவாக்கினார். தாமிரம் மற்றும் துத்தநாகத் தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இந்த உலோக அடுக்கு தொடர்ச்சி யாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது 

என்பதை சோதனை மூலம் மற்றவர் களுக்கு விளக்கினார். இந்த அடுக்கு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்பதை வோல்டா அறிவித்தார்.


மிருகங்களுக்கும், மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பு தவளையின் நடனமாடும்  கால்கள் மூலம் முதன்முதலில் அறியப்பட வில்லை. அதற்கு முன்பாகவே முதலாம்
 நூற்றாண்டில் பெரிய பிமைனி டார்பிடோ என்ற மீன்வகை மீனவர்களுக்கு மின் அதிர்ச்சியை உண்டாக்கும் என்பதை கண்டுபிடித்து இருந்தனர். எலக்ட்ரிக் ஈல் எனப்படும் 

விலாங்கு மீனும் மின் அதிர்ச்சியை ஏற்படுத் தும் என்பதும் முன்னரே அறியப்பட்டு இருந்தது. வோல்டா, தனது கண்டுபிடிப்பான பேட்டரியை அந்த விலாங்கு மீனின் உடல் அமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தார். 

தற்கால பேட்டரி வோல்டாவின் அடுக்கிலிருந்து சிறிதளவே வேறுபடுகிறது. வோல்டாவின் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகின் மிகப் பெரிய சாதனையாகும்.

                                                நன்றி,
                                          Spending Time...!

No comments:

Post a Comment

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry r...

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry recipe | Village Food Area Welcome to Youtube Channel: Village F...