Saturday, 27 June 2020

மாஸ்க் (Mask)அணியும்போது நாம் செய்யும் சிறிய தவறு என்ன? மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா ? மாஸ்க் முறையாக பராமரிக்க வேண்டும்.

மாஸ்க் (Mask)அணியும்போது நாம் செய்யும் சிறிய தவறு என்ன? மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா ? மாஸ்க் முறையாக பராமரிக்க வேண்டும்.

 மாஸ்க்(Mask) அணிவது மட்டும் முக்கியமல்ல அதை எப்படி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க் (Mask)  அணிவது கட்டாயமாகி உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாஸ்க் அணிவதை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் அணிகின்ற மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா என்பது தான் கேள்விக்குறி. 
மக்களில் பலர் ஒரே மாஸ்க்கை பல நாட்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். மாஸ்க்கை எப்படி கழட்டுவது அதை எங்கே அகற்ற வேண்டும் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.

நீண்ட நேரம் மாஸ்க் (Mask)  அணிவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இது உங்களுக்கு அரிப்பு, வியர்வை போன்ற பல இன்னல்களை ஏற்படுத்தும்.

நீங்கள் மாஸ்க்கை சரியான வழியில் பயன்படுத்தா விட்டாலும் உங்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது.


சுகாதார அமைப்பின் கூற்றுப்படி நீங்கள் மாஸ்க்கை பயன்படுத்தி வந்தாலும் இருமல் வந்த அதே மாஸ்க்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சரியானது கிடையாது. அந்த மாஸ்க் குறைவான செயல்திறன் கொண்டது. எனவே அந்த பழைய மாஸ்க்கிற்கு பதில் புதிய மாஸ்க்கை எடுத்து பயன்படுத்துங்கள்.


நீங்கள் இருமும்போது பரவுகின்ற அனைத்து நீர்த்துளிகளையுமே மாஸ்க்கால் தடுக்க முடியாது.  இருமும்போது நீர்த்துளிகள் 3 அடி தூரம் வரை பயணிக்கலாம்.இது குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவர்கள் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி நீர்த்துளிகள் எவ்வளவு தூரம் பரவக்கூடும் என்பதை ஆய்வு செய்தனர். அப்பொழுது தான் நல்ல மாஸ்க்களுடன் நீர்த்துளிகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டது .

 தொடர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் மூச்சு முட்டுவது போல சிலர் நினைப்பதுண்டு. அது புதிதாக சில விஷயங்களைச் செய்யும்போது ஆரம்பத்தில் அது அசௌகரியமாகத்தான் இருக்கும். பின்பு அது பழக்கப்படுத்தப்பட்ட பின் சரியாகிவிடும். அதனால் யோசிக்காமல் வீட்டை வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்.


மாஸ்க் (Mask)  அணிவதால் யாரோ ஒருவர் இரும்பினால் கூட அவர்கள் வெளியிடும் உமிழ்நீரின் அளவை குறைக்கிறது. எனவே நோய்வாய்ப்பட்டவர் மாஸ்க் அணியும் போது இதன் மூலம் தொற்று பரவுதலை தடுக்க முடியும். 

சந்தையில் பல வகையான மாஸ்க்கள் கிடைக்கின்றன. இருப்பினும் N95 மாஸ்க்கள் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்கும். அதே வேளையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி முகமூடிகள் மற்றும் அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் முகமூடிகளும் நன்றாக வேலை செய்கின்றன.எனவே நீங்கள் உறுதிப்படுத்த வேண்டிய ஒரே விஷயம் அவற்றின் சரியான அகற்றல் மற்றும் கவனிப்பு தான்.

அதே நேரத்தில் அதை நீங்கள் சரியான முறையில் அணிய வேண்டும். அப்போது தான் உங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மாஸ்க்கை தொடுவதை தவிருங்கள். உங்களுக்கு பொருத்தமான மாஸ்க்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

சமூக தூரத்தை கடைப்பிடிப்பது, கூட்டத்தைத் தவிர்ப்பது, அடிக்கடி மேற்பரப்புகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மற்றும் மாஸ்க்களை முறையாக அகற்றுவதை உறுதி செய்தல் ஆகியவை Corona இன் அபாயத்தைக் குறைக்கும்.                                                நன்றி.

                                         Spending Time.

No comments:

Post a Comment

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry r...

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry recipe | Village Food Area Welcome to Youtube Channel: Village F...