தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தண்டனை காலம் முடியும் 2021ம்ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன் ‘’சசிகலா (கைதி எண் 9234) எப்போது விடுதலை செய்யப்படுவார்?’’ எனதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு கர்நாடக சிறைத்துறை, “சசிகலா விடுதலை செய்யப்படுவதில் பல தரப்பட்ட குழப்பங்கள் இருப்பதால், வெளியே வரும் தேதியை எங்களால் துல்லியமாக தெரிவிக்க முடியாது’’ என பதிலளித்தது.
இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சசிகலாவின்விடுதலை தேதி தொடர்பான தகவல் தவறானது. சிறைத்துறையில் அந்த மாதிரியான பேச்சுவார்த்தையோ, நடவடிக்கையோ எதுவும்நடைபெறவில்லை’’ என்றனர்.
பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் கூட இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அதுபோன்ற எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்கள். இது வதந்தி என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூர் சிறையில் நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தேதி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம் சரியான தேதியை இப்போது கூற முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பதால், இதுபோன்ற மூவ்கள் எடுத்து வரப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகின.
நன்றி.
Spending Time.
No comments:
Post a Comment